கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சியில், ஜெகதாபி பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பாம்பாலம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று(செப்.15) அதிகாலை மங்கள இசையுடன் துவங்கியது.
பிறகு விநாயகர் வழிபாடு நடைபெற்று யாக வேள்வியில் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் வேதபாராயணம்,
பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெகதாபி ஊராட்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.