ஜெகதாபியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாபி பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 26 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், ஜெகதாபி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள வீராசாமி என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதாபி கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, ஜெகதாபி அருகே துளசிகொடும்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெகதாபி பகுதியை சேர்ந்த அஜீத் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 250 ஐயும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையப்பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.