நாய் குறுக்கே வந்ததால் டூவீலரிலிருந்து விழுந்து விபத்து.

65பார்த்தது
லட்சுமணன் பட்டி பிரிவு சாலையில் டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து விபத்து. பெண் படுகாயம்.


கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் வயது 52.

இவரது மனைவி இளவரசி வயது 38.
இவர்கள் இருவரும் டூவீலரில் நவம்பர் 20ஆம் தேதி இரவு 8: 30 மணி அளவில், சேங்கலில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.


இவர்களது வாகனம் லட்சுமணன் பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, இளவரசியின் சகோதரி மற்றொரு டூவீலரில் முருகையன் ஓட்டிச் சென்ற டூவீலருக்கு முன்பாக சென்று கொண்டிருந்தார்.


அப்போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று சாலையை கடந்து சென்றது.

இதனை கவனித்த டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த இளவரசி திடீரென டூவீலரில் இருந்து குதித்தார்.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக முருகையன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரில் செல்லும்போது திடீரென குதித்து விபத்து ஏற்படுத்திய இளவரசி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி