கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய தேவைகளை செய்து தருவேன் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 வது வார்டு உறுப்பினர் தேவி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி பேரூர் செயலாளர் இரா. முருகேசன், பா. பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்ணன் , விமல் , சுரேஷ் , சரவணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.