சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை. MLA துவக்கி வைத்தார்.

85பார்த்தது
கம்ம நல்லூர் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்ம நல்லூர் ஊராட்சியில், பொய்கைபுத்தூர் - மேட்டு மகாதானபுரம் இணைப்புச் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சாலையை மேம்படுத்த, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 35 லட்சத்தில் பூமி பூஜை எம். எல். ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

பூமி பூஜை முடிந்த பிறகு, அதற்கான பணிகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி