செல்வ நகரில் சிக்னலை வெளிப்படுத்தாமல் காரை திருப்பிதால் டூ வீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.
கரூர் மாவட்டம், புலியூர்,
பி. வெள்ளாளப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி கோமதி வயது 48.
இவர் ஜூன் 4-ம் தேதி காலை 8: 45 மணி அளவில், அவரது டூவீலரில் புலியூரில் இருந்து
பி. வெள்ளாளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் புலியூர் செல்வ நகர் பிரிவு அருகே வந்த போது, அதே சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்ற கார், திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் இடது புறம் திருப்பியதால் பின்னால் வந்த கோமதியின் டூவீலர் காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் அடிபட்டு, கீழே விழுந்ததில் கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், , உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோமதியின் கணவர் கோவிந்தசாமி அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.