கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொளக்காரன் பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (55). இவர் கடந்த 17ஆம் தேதி தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தனலட்சுமி கழுத்தில் இருந்த சுமார் 4 பவுன் தங்க செயினை அறுத்து தப்பி ஓடிவிட்டார். புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.