50 ஆண்டுக்குப் பிறகும் ஆசிரியர்களை மறக்காத முன்னாள் மாணவன்

72பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி நடுநிலைப் பள்ளியில் கடந்த 71 முதல் 73 ஆம் ஆண்டு வரை பயின்றவர் எம். ஏ. ஸ்காட் தங்கவேல் இவர் எவர்கிரீன் ஃபவுண்டேஷன் நிறுவனர் தலைவராகவும் ஆன்மீகம், விளையாட்டு, இலக்கியம் போன்ற பதவிகள் மூலம்  பொது சேவை ஆற்றி வருகின்றார்.

ஜூலை ஒன்றாம் தேதி மணவாசி அரசு நடுநிலைப் பள்ளியில் எம். ஏ. ஸ்காட் தங்கவேல் பள்ளிக்குச் சென்று நாட்டுக்காக அரும்பாடு ஆற்றிய தலைவர்கள் படங்களை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் குருவான ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் மரக்கன்றுகளை நட்டு வைத்தும் சிறப்பித்தார்.

பள்ளியில் செயல்பட்டு வரும் பசுமை குடில், மூலிகை பண்ணை போன்றவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி காண்பித்தார். தொடர்ந்து சென்னை திரைப்பட இயக்குனர் எஸ். மார்க் சண்முகர், ஓம் சக்தி சேகர், ஏற்றுமதியாளர் லாலாபேட்டை சதீஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தான் படித்த கரூர் மணவாசி நடுநிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அப்பள்ளி மாணவர் எம். ஏ. ஸ்காட் தங்கவேல் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்தார். விழாவில் திரைப்பட இயக்குனர் எஸ் மார்க் சண்முகர், பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, ஏற்றுமதியாளர் லாலாபேட்டை சதீஷ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி