சட்டமேதை அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளில் வீரவணக்கம்.

79பார்த்தது
சட்டமேதை அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள்- வீரவணக்கம் செலுத்திய பட்டியலின விடுதலை பேரவை அமைப்பினர்.


இந்திய திருநாட்டின் சட்ட வரையறையை ஏற்படுத்தி தந்த சட்ட மேதை பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் இன்று.


அவரது பிறந்த நாளை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இன்று நாடெங்கும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு, அவரது திருவுருவப்படத்திற்கு பட்டியலின விடுதலைப் பேரவை நிறுவனத் தலைவர் தலித்.
கே. ஆனந்தராஜ் தலைமையில் மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொருளாளர் வழக்கறிஞர் தனபாலன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி கலா, கரூர் மாவட்ட அவை தலைவர் வெங்கடாசலம் கலந்து கொண்டு மக்கள் மனதில் வாழும் தலைவருக்கு வீரவணக்க கோஷம் எழுப்பி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி