வருகின்ற சட்டமன்ற தேர்தல் தமிழக விடுதலைக்கான தேர்தல்- எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டதில் முன்னாள் அமைச்சர், கட்சியின் அமைப்புச் செயலாளர் சின்னச்சாமி, முன்னாள் அமைச்சர், மகளிர் அணி இணைச் செயலாளர் வி. சரோஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய எம். ஆர். விஜயபாஸ்கர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை காக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த ஏடிஜிபி தனக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லக்கூடிய நிலை உள்ளது என்றால் அதை எண்ணி பார்க்க வேண்டும்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகத்தின் விடுதலைக்கான தேர்தல் என்பதை பொதுமக்களும் கட்சியினரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.