சரக்கு வாகனம் மீது, டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

60பார்த்தது
சரக்கு வாகனம் மீது, டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
முன்னாள் சென்ற சரக்கு வாகனம் எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.


மதுரை மாவட்டம், மேலூர், பாப்பன்குளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் வயது 22.

இவர் மார்ச் 5ஆம் தேதி காலை 11: 15 மணியளவில் கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.


இவரது வாகனம் கரூர் சக்தி மெஸ் அருகே வந்தபோது, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவா வயது 21 என்பவர், ஓட்டிச் சென்ற டாட்டா ஏஸ் வாகனத்தில், திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், இடது புறம் திருப்பியதால், சரக்கு வாகனத்திற்கு பின்னால் சென்ற கண்ணதாசனின் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கண்ணதாசனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அக்க்ஷயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை முறையாக சிக்னல் வெளிப்படுத்தாமல் திருப்பிதால், ஏற்பட்ட விபத்துக்கு காரணமான, சரக்கு வாகன ஓட்டுனர் தேவா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி