டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் உயிரிழப்பு.

4480பார்த்தது
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தங்கராசு. வயது 60. இவர் மார்ச் 11ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர்- சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் மன்மங்கலம் நால்ரோடு அருகே வந்தபோது, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், தங்கராசு ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் தங்கராசு உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த தங்கராசுவின் மருமகன் ஹரிஹரசுதன் வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வாங்கல் காவல்துறையினர், உயிரிழந்த தங்கராசுவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி