டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் உள்பட 3 பேர் படுகாயம்.

82பார்த்தது
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் உள்பட 3 பேர் படுகாயம்.
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் உள்பட 3 பேர் படுகாயம்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பெரிய திருமங்கலம், ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 48.

இவரது உறவினர் ஆரியூர், வள்ளுவர் வீதியைச் சேர்ந்த விஜயபூபதி மனைவி நுமினிலையா வயது 56 என்பவருடன், டூவீலரில் பிப்ரவரி 10ம் தேதி காலை 4 மணி அளவில்,
பெரியமதியக கூடலூரிலிருந்து பெரிய திருமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் அருங்கரை அம்மன் கோவில் ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், தென்னிலை, மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் நந்தகுமார் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், சுரேஷ்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சுரேஷ்குமார் & நுமிலியாவை திருச்சி அரசு மருத்துவமனையிலும்,
நந்தகுமாரை கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்த விஜயகுமாரின் மனைவி ஸ்ரீவித்யா வயது 36 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி