வாக்களித்த மக்களுக்கு வலைத்தளத்தில் நன்றி தெரிவித்த எம் எல் ஏ. மொஞ்சனூர் இளங்கோ.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வருபவர் மொஞ்சனூர் இளங்கோ.
நடந்து முடிந்த கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியும் ஒன்று.
இந்தியா கூட்டணியில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பதிவான வாக்குகள் 87, 390. இதில் 43, 048 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதாக கூறி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ சமூக வலைத்தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.