திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் என்ற இடத்தில், சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில், பைக்கை ஓட்டிச் சென்ற சௌந்தரர் ராஜன் (40) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.