சின்னாகவுண்டனூர் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

61பார்த்தது
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள 10வது வார்டு சின்னாகவுண்டனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் மக்கள், தங்கள் வசிக்கும் பகுதியில் சமுதாயக்கூடம் நாடக மேடை விளையாட்டு அரங்கம், மயானத்திற்கு சுற்றுச்சூழல், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சின்டெக்ஸ் டேங்க் பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் பிறக்க வேண்டும் போதிய மின்விளக்குகள் இல்லாததால், மக்கள் தினந்தோறும் அவதியுற்று வருவதாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர் நாட்டாமை சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாகவுண்டனூர் பகுதியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி