மக்களோடு மக்களாக பழகினால் தான் ஓட்டு விழும்- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கட்சியினருக்கு விளக்கம்.
(மக்களோடு மக்களாக பழகினால் தான் ஓட்டு விழும்- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் கட்சியினருக்கு விளக்கம் அளித்தார்.
கரூர் மாவட்டம், கரூர் மேற்கு ஒன்றியம் & புஞ்சை தோட்ட குறிச்சி பேரூர் கழகம் சார்பில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் திரு வி க, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கட்சியின் மாணவர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், இது அதிமுக பொதுக் கூட்டம் அல்ல. கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்.
வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதற்காக நாம் இப்போது இருந்தே மக்களை சந்திக்க வேண்டும்.
அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய கட்சியின் செயலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
மக்களுடன் மக்களாக பழக வேண்டும். அவர்களிடம் கட்சியின் நிலைப்பாட்டையும், கடந்த காலத்தில் நடந்த செயல்பாட்டையும் விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க செய்ய வேண்டும்.