விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

1097பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னசேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி தேர்வு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மகாலிங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், சேங்கல் ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி பாண்டியன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், திமுக கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி