தென்னிலை-கொலை வழக்கில் விடுதலையானவர்க்கு, மேல் முறையீட்டு வழக்கில் 5 வருட சிறை தண்டனை.
2017 ஆம் ஆண்டு, கோவை, அகிலாண்டபுரம் அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், 54/ என்பவர்,
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்விழியில், தங்கி விவசாய வேலை செய்து வந்தார்.
அப்போது உடன் வேலை செய்த மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தனலட்சுமி என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது.
இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடராஜ்
தனலட்சுமியை கொடுமுடி - முத்தூர் சாலையில் வாய்க்கால் பாலத்தின் கீழ் வைத்து கொலை செய்தது தொடர்பாக தென்னிலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ் வழக்கு 2018 ஆம் ஆண்டு கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வழக்கு தள்ளுபடி ஆனதால், நடராஜ் விடுதலையானார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவந்த வழக்கில் நேற்று இன்று கொலை குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு நடராஜ்க்கு 5 வருடம் சிறை தண்டணையும் மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு, நடராஜை மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.