நீதிமன்ற தலைமை எழுத்தர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.

576பார்த்தது
நீதிமன்றத்துக்குள், நீதிமன்ற தலைமை எழுத்தர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.



கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் செயல்படும், உரிமையியல் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தர் ஆக பணியாற்றி வருபவர் நடராஜன்.


இவர் பணியிட மாற்றம் காரணமாக கடந்த 06. 02. 24 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் தலைமை எழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு மருத்துவ மற்றும் தற்செயல் விடுப்புகள் வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், தனது குடும்பமே சிரமப்பட்டு வருகிறது என்றும், தினசரி பணிக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு சென்று வர பேருந்துக்கு கூட பணம் இல்லை என கூறியுள்ள நடராஜன், தன்னை கொத்தடிமை போல், தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, நீதிமன்றத்தில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார்.


இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்பு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி