ஆரியூர்-மதுவுக்கு அடிமையானவர் காரில் பிணமாக கண்டெடுப்பு.

79பார்த்தது
ஆரியூரில் மது போதைக்கு அடிமையானவர் காரில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு.


ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ் வயது 37.

அண்மை காலமாக இவர் மது போதைக்கு அடிமையாக இருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் காலனி அருகே உள்ள ஆரியூர் பகுதியில் டிஎன் 33 பிபி 2482 என்ற டாடா இண்டிகா காரில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.

பின்னர் அதே காரில் நள்ளிரவு 1. 30 மணி அளவில் மதுபோதையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் உயிரிழந்த தங்கராஜன் மனைவி சத்யாவுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்து பார்த்த சத்யா அதிர்ச்சி அடைந்த்தோடு, இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.


புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த தங்கராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
க. பரமத்தி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி