அரவக்குறிச்சி-பிஜேபி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

1040பார்த்தது
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, பிஜேபி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காட்டுமுன்னூர்,
வி. பி. திருமண மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவருமான டாக்டர். என். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளரும், மாவட்ட செயலாளருமான துரைராஜ் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் தங்கவேல், கோபிநாத், நல்ல சிவம், ஜவஹர்லால், சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜித் குமார், இணை அமைப்பாளர் ராஜ்குமார், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிஜேபி கட்சி கிளை தலைவர்கள், ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளரும், கரூர் மாவட்ட தலைவருமான செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி