திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மலைக்கோவிலூர் அருகே உள்ள குடகனாற்று பாலத்தில் நடந்து கடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பாலத்தில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜா என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, ருக்குமணி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ருக்குமணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
எனவே, இந்த சம்பவம் அறிந்த நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்து, பாதிக்கப்பட்ட பெண் ருக்குமணியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பேருந்தை கவனக்குறைவாக ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.