விளவங்கோடு - Vilavengodu

மார்த்தாண்டம்:  டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது

மார்த்தாண்டம்:  டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜன் (54). இவர் சென்னைத் தோட்டம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்த பாருக்கு நேற்று நள்ளிரவு வந்த நபர் ஒருவர் அங்கிருந்து இரண்டு சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு, கடையில் மேசை டிராயரில் இருந்த ரூபாய் 6 ஆயிரத்தை திருடி உள்ளார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்குள் புகுந்து அங்கிருந்த செம்பு கம்பிகளையும் திருடி உள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியை சேர்ந்த லிங்கபாண்டியன் (44) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా