போலி நகைகள் வைத்து மோசடி செய்ய முயற்சி

567பார்த்தது
போலி நகைகள் வைத்து மோசடி செய்ய முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பிபிஎம் ஜங்ஷனில் செயல்பட்டு வரும் நகை அடகு கடை ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார், அவர் 25 பவுன் நகைகளை கொடுத்து அடகு வைத்து பணம் வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அவரது நடவடிக்கைகளை பார்த்த ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பின்னர் அந்த நகைகளை பரிசோதித்துப் பார்த்தபோது அது போலி நகை என தெரியவந்துள்ளது. உடனடியாக ஊழியர்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் டிப்டாப் ஆசாமியை பிடித்து அவரிடம் இருந்த பேக்கை கைப்பற்றினார். பேக்கில் 25 பவுனுக்கு மேற்பட்ட போலி நகைகள் இருந்தவுடன், பேக்கில் போதை ஊசிகளும் இருந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். தான் கேரளாவை சேர்ந்தவன் என்றும் பாண்டிச்சேரி சேர்ந்தவன் என்றும் நான் யார் என்றும் போலீசாரடம் திருப்பி கேள்வி எழுப்பியுள்ளார். மீண்டும் மீண்டும் அவரது பேச்சுக்கள் செயல்பாடுகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அந்த நபர் மோசடி கும்பலை சேர்ந்தவர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி