டாஸ்மாக் கடையில் திருடி சிக்கிய வாலிபருக்கு சிகிச்சை

81பார்த்தது
டாஸ்மாக் கடையில் திருடி சிக்கிய வாலிபருக்கு சிகிச்சை
கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம தவர் ஒருவர் மது பாட்டில்களை திருடினார். பின்னர் கடைக்கு உள்ள இருந்து மது அருந்தி போதையில் கடைக்கு உள்ளே உறங்கியுள்ளார்.
       நேற்று காலையில் ஷட்டர் திறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த வாலிபர் தப்பி ஓடினார்.
     அவரை துரத்தியபோது கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.  
      இது தொடர்பான புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் அந்த நபரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடையில் சோதனை செய்தபோது ரூபாய் 200 பணமும் 2, 360 ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் திருடப்பட்டிருந்தன.
      அவை அனைத்தும் அந்த வாலிபரின் பேக்கில் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியை சேர்ந்த என கூறி உள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி