ஊராட்சித் தலைவர்கள் திடீர் போராட்டம்

80பார்த்தது
ஊராட்சித் தலைவர்கள் திடீர் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை பேரூராட்சியுடனும் , 34 ஊராட்சிகளை நகராட்சிகளுடனும் இணைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியது. இதனால் மத்திய அரசின் பிரதமர் வீடு திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உட்ட மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும் என்றும், ஊராட்சிகளை பேரூராட்சியுடனும் , நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி , சொத்து வரி அதிக அளவில் உயரும் எனவும் பொதுமக்கள் அச்சப்படுவது உடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் மாபெரும் கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளவங்கோடு, வெள்ளாங்கோடு, மலையடி , மருதன்கோடு , தேவி கோடு, புலியூர் சாலை, மாங்கோடு , மஞ்சாலுமூடு உட்பட்ட பேரூராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் கிடைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் விளவங்கோடு ஊராட்சி மன்ற தலைவி லைலா ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் , வெள்ளாங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் கிறிஸ்டோபர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

தொடர்புடைய செய்தி