மார்த்தாண்டம்: முதல்வர் மருந்தகம்.. கலெக்டர் பார்வையிட்டார்

65பார்த்தது
மார்த்தாண்டம்: முதல்வர் மருந்தகம்.. கலெக்டர் பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.   
அதனடிப்படையில்  குமரியில் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில்  மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த  மருந்தகத்தினை நேற்று குமரி கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளின் நிலைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  

அதனைத்தொடர்ந்து மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  நடைபெற்ற ஆய்வில்  துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி