குமரி -21 கிமீ தூரம் மராத்தான் போட்டி

55பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம்
மார்த்தாண்டம் கேப் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் சேரிட்டி ஆர்கனைசேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தடகள அசோசியேஷன் இணைந்து 21- கிலோமீட்டர் தூரம் தொடர் மராத்தான் போட்டியை நடத்தினர். புவி வெப்பம் மயமாகுதலை தவிர்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்தல், இயற்கையை பாதுகாத்தல் , மரம் வளர்தல் மற்றும் போதை விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி மார்த்தாண்டம் வெட்டு வெந்நி ஒய் எம் சி ஏ மைதானத்தில் வைத்து தொடங்கியது. போட்டியை குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.
மராத்தான் போட்டியானது வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் சி எஸ் ஐ சர்ச், மீண்டும் வெட்டு வெந்நி , காப்புக்காடு, முஞ்சிறை குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது,.
இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சிசில் குமார் நன்றி கூறினார். இணைச் செயலாளர் சாந்த சீலன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பேட்டி: எட்வர்டு ஸ்மித்

தொடர்புடைய செய்தி