குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி மீது தாக்குதல்

529பார்த்தது
குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி மீது தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுபிள்ளை(55) தொழிலாளி இவர் நேற்று பொன்மனை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது , அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவர் , மது அருந்துவதற்காக , பொன்னுப்பிள்ளை-யிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பொன்னு பிள்ளை-யை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அனீஸை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி