ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கொடியேற்றம்

570பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் 108வைணவ திருத்தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதையடுத்து இந்த வருடம் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது முன்னதாக  ஆலயத்தின் முன்பாக அமைக்கபட்ட தங்ககொடிமரத்திற்கு சிறப்பு பூஜை
ள் செய்யபட்டது தொடர்ந்து ஆலய தந்திரி  வஞ்சியூர் அத்தியற மடத்தில் கோகுல் நாராயணரூ கருட இலட்சினை பொறிக்கபட்ட  திருக்கொடியேற்றியை ஏற்றி வைத்தார் பத்துநாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் ஆதிகேசவ பெருமாள் சாமி அனந்த வாகனம் கமல வாகனம் பல்லக்கில் சாமி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறுகிறது தொடர்ந்து 9ஆம் திருவிழாவான ஏப்ரல் 20ஆம் தேதி முக்கிய நிகழ்வான பள்ளிவேட்டை நடைபெறுகிறது பங்குனி திருவிழாவின் முக்கிய வைபவமான முன்று நதிகள் சங்கமிக்கும் மூவாற்றுமுகத்தில்   ஆறாட்டு வைபவம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது

தொடர்புடைய செய்தி