கொல்லங்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவ கிராமங்களில் நேற்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லடி தோப்பு என்னும் இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சத்தியசீலன் என்பவரின் வீட்டின் முன் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். இதில் கடையில் 18 பண்டல்களில் நான்கு கிலோ குட்கா புகையிலை இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் சத்தியசீலனை கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவுக்கு விசைப்படையில் மீன் பிடிக்க செல்லும் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும்போது விற்பனை செய்ய பண்டல்களைப் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார். போலீசார் குட்கா புகையிலையை பறிமுதல் செய்து சத்தியசீலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.