பூதப்பாண்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

60பார்த்தது
பூதப்பாண்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
பூதப்பாண்டி அடுத்த வீரவநல்லூர் கால்வாய் கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

      அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் மேல தெரிசனம் கோப்பு பகுதி சேர்ந்த சுனில் (22),   செம்பொன்விளையை சேர்ந்த நிதின் டேவிட் (22) என்பது தெரிய. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி