கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.