நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஒரு டீக்கடை அமைந்துள்ளது. இந்த டீக்கடைக்கு சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் வந்தார். அவர் டீக்கடையின் கல்லா மேஜைக்கு அருகில் அமர்ந்து மேஜையில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்த டீக்கடை ஊழியர் ஒருவர் அவரை கையும், களவுமாக பிடித்தார். தொடர்ந்து மற்ற ஊழியர்கள் சேர்ந்து அந்த நபர் திருடிய பணத்தை கையகப்படுத்தினர். இந்த காட்சிகள் அனைத்தும் டீக்கடையில் பொருத்தப்பட்ட இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த திருட்டு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவர் மீது புகார் யாரும் கொடுக்க முன்வரவில்லை. இந்த நபர் பல இடங்களில் - தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.