கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் நேற்று (டிசம்பர் 12) அவ்வை சண்முகம் சாலையில் ரோந்து சென்றபோது, நம்பி கண்ணன் என்பவர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்தியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.