நாகர்கோவிலில் பேரிடர் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

74பார்த்தது
நாகர்கோவிலில் பேரிடர் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் தீயணைப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (அக்.,15) நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் உதவிகள் செய்வதற்கான கனமழை வெள்ள மீட்பு முறைகள் பற்றிய வகுப்பு நடந்தது.

இதற்கு உதவி மாவட்ட அலுவலர் துரை தலைமை தாங்கினார். இதில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு வெள்ளத்தில் சிக்கினால் எப்படி தற்காத்துக் கொள்வது, தேவையில்லாத பொருட் களை வைத்து மிதவை தயாரிப்பது எப்படி? வெள்ளத்தில் சிக்குபவர்களை கயிறு மூலமாக மீட்பது எப்படி? என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் வெள்ள மீட்பு மிதக்கும். பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி