நாகர்கோவில்: கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
சி. ஐ. டி. யு. குமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கால தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், 

அரசு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று கூட்டுறவு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி