கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை மாணவ மாணவியர்கள் தத்துவரூபமாக செய்து காண்பித்தனர். கிறிஸ்மஸ் தாத்தா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் ஆசியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.