மருந்து விற்பனை பிரதிநிதி மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு.

80பார்த்தது
நாகர்கோவில் மேலபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 34), மருந்து விற்பனை பிரதிநிதி. இவருக்கும், இரு ளப்பபுரம் பகுதியை சேர்ந்த தீபக் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மகாராஜன் தனது வீட்டில் இருந்த போது தீபக் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கினார்கள். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி