அண்ணா பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி.

68பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 35 வயது பெண் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் வந்து குளச்சல் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய மற்றொரு பெண் ஒருவர் திடீரென பஸ்சில் ஏறிய பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தார். ஆனால் இதை சுதாரித்துக் கொண்ட அவர் நகையை கையால் இறுகப்பிடித்துக் கொண்டார். இதனால் நகை அறுந்தது. இதில் 4 கிராம் நகை பஸ்சில் விழுந்தது. இச்சம்பவத்தை சகபயணிகள் பார்த்து விட்டதால் நகையை அறுத்த பெண் பஸ்சில் விழுந்த நகையை எடுக்காமலேயே அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். எனினும் பயணிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை பிடித்து கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அறுந்த நகையை எடுத்துக்கொண்டு அந்த பெண் குளச்சல் நோக்கி சென்றார். இச்சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை பறிப்பு மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக் கின்றன. எனவே இதைதடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி