கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று அறுகுவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதிராஜா (வயது 19), தக்கலை அஞ்சுவர்ணம் தெருவை சேர்ந்த முகமது பகீம் (21) மற்றும் மேல புத்தேரியை சேர்ந்த மகேஷ்வர் (21) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. கைதான மகேஷ்வர் மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு. 3 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுஜின் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி இருக்கிறார்கள். எனவே கஞ்சா விற்பனை செய்த சுஜினை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.