கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் நேற்று (அக்.,12) சற்குணவீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர்சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கடை உரிமையாளரான மேல ராமன்புதூரை சேர்ந்த பிரேம்நாத் (வயது 54) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கடையில் இருந்து 3 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல வட்டவிளை அல் அமீன்நகரை சேர்ந்த ஜாகீர் உசேன் (54) என்பவரது கடையில் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரும் கைது செய்யப்பட்டார்.