வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட திவண்டாகோட்டை ஊர் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 19-வது ஆண்டு விழா மற்றும் மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டியை துவக்கி வைக்க வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்க்கு வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்ற தலைவர் நீலதங்கம் சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் இரு அணி வீரர்களை சந்தித்து கை குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்து போட்டிகளை துவக்கி வைத்தார் விஜய் வசந்த் எம். பி.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், வெள்ளிமலை காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயபாரத், நவீன், தனிஷ், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.