திற்பரப்பு அருவியில் 4 - வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

83பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பேச்சிப்பாறை அணை உட்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெள்ள அபாய அளவை கடந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்கள் பேரிடர்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளின் நீர்மட்டத்தை கட்டுப்பாடான அளவில் வைத்து கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

      அந்த வகையில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டத்தை 43 அடியாக வைத்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அணை நீர்மட்டம் 45 அடியை எட்டி உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.   இதனால் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

      இதையடுத்து  திற்பரப்பு அருவியில் இன்று (21-ம் தேதி) 4 - வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இதனால் அறிவில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி