நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள் போதை எதிர்ப்பு பேரணி

74பார்த்தது
தமிழக அரசு சார்பில் போதை பொருளற்ற சமுதாயம் அமைத்திடவும், சமூகத்தில் போதை பொருள்களுக்கு எதிரான கல்வியும் விழிப்புணர்வையும் வழங்கி போதை பொருள் பழக்கத்திற்கு யாரும் அடிமையாகாமல் தடுத்திடும். வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்திடவும் பள்ளிகள் கல்லூரிகள் பொது இடங்களில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திடவும் அரசு உடுத்தப்பட்டிருந்தது.

       அதன்படி குமரி மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி பள்ளி, கல்லூரிகள் மற்றும் இளம் சமுதாயத்தினர் எடுத்தனர்.

      இதில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள்  கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக , கைகளில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

தொடர்புடைய செய்தி