முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 99 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி இன்று காலையில் நாகர்கோவில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி மு க சார்பில் முரசொலி மாறன் உருவப்படுத்துவதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் எஃப் எம் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் தில்லை செல்வம், திமுக தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ஆலிவர்தஸ் ஒன்றிய செயலாளர்கள், நகர பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.