குளச்சல் நகர அதிமுக தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் நகர செயலாளர் ஆன்ட்ரோஸ் தலைமையில் நேற்று (பிப்.2) மாலை நடந்தது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவீந்திரவர்ஷன், நகராட்சி தலைவர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குளச்சல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மேலும் மணவளக்குறிச்சி மணல் ஆலையை மூட மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது, குளச்சல் பேருந்து நிலையத்தை உடனே திறக்க நகராட்சியைக் கேட்பது, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கேட்பது, இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்குக் கொண்டு செல்வது என்பன வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், எம்ஜிஆர் மன்றத் தலைவர் எம்.எஸ்.எம். பிள்ளை, மாநில இளைஞரணிச் செயலாளர் சிவசெல்வராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.