குளச்சல் அ. தி. மு. க. அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

85பார்த்தது
குளச்சல் அ. தி. மு. க. அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புத்தாண்டு விழா நகர அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்  அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற இணை செயலாளர் ஆனக்குழி சதீஸ், நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர எம். ஜி. ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். நகர இணைச்செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார். மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவர் எஸ். எம். பிள்ளை, வக்கீல் சந்திரசேகர், நாஞ்சில் ஹனீபா, ஜெகன், வினோத், ஜோக்கின், சுபல், ஆன்றனி, நடேசன், சிசிலிசமீன், ஜெரில் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அரசு மேல்நிலை பள்ளி இல்லாத நகராட்சியாக குளச்சல் நகராட்சி உள்ளது. எனவே குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளி தொடங்க அரசை கேட்பது, கடந்த நவம்பர் மாதம் 3 ம் தேதி குளச்சல் துறைமுக பகுதியில் மாயமான கோடிமுனை சிறுவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்பது, ரத்து செய்யப்பட்ட ஏற்காடு ரயிலை மீண்டும் இயக்க கேட்பது, கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி வழியாக ஹைதராபாத்திற்கு ரயில் இயக்க கேட்பது எனவும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் புத்தாண்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி