ராமன்துறையில் நீதிபதி ஜோசப் சிலை திறப்பு

554பார்த்தது
ராமன்துறையில் நீதிபதி ஜோசப் சிலை திறப்பு
நீதிபதி எஸ். ஜோசப் 25-வது நினைவு தினத்தையொட்டி அவர் பிறந்த இடமான கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவ கிராமத்தில் நினைவு இல்லம், உருவ சிலை நிறுவப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஜெ. ஸ்டீபன் தலமையில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் திறந்து வைத்தார். உள்பகுதியில் உள்ள புனித அந்தோனியார் கெபியை எஸ். ஜாண்சன் திறந்து வைத்தார். நீதிபதி ஜோசப் உருவ சிலைக்கு அவரது மூத்த மகன் டாக்டர் எட்வின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளீட்டஸ் மேரி, ஜாய்ஸ். எவரெஸ்ட் மேரி, மரியறோஸ், மரியபுஷ்பம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100- ஏழை மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ஜோர்தான் அனைவரையும் வரவேற்று பேசினார். செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அருட்பணியாளர்கள் அமலநாதன், ஜாண் டமாசின், ஜாண் பிரிட்டோ, ஜாண்போஸ்கோ மற்றும் நீதிபதி ஜோசப்பின் மக்கள், மருமக்கள், உறவினர்கள் ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி